புதுச்சேரி

பாவேந்தர் இலக்கியத் திங்கள் விழா

4th Sep 2019 10:06 AM

ADVERTISEMENT

பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை வகித்து பேசியதாவது:
பாரதியாரும், பாரதிதாசனும் கவிதை இயக்கத்துடன், நாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றினர். வ.உ. சிதம்பரனார் நாட்டின் விடுதலைக்காக தம் பொருளையும், வாழ்வையும் இழந்தார். இவர்களது தியாகங்களால்தான் விடுதலை கிடைத்தது. நாட்டின் மேன்மை இளைஞர்களிடம் உள்ளது. வ.உ. சிதம்பரனார் போல, இளைஞர்கள் நாட்டுப்பற்றுடன் வாழ வேண்டும்.
அறிஞர் அண்ணா மொழியறிவுடன், தமிழின மேன்மைக்குப் பாடுபட்டார். 
வ.உ. சிதம்பரனாரின் இணையற்ற தியாகத்தையும், இலக்கிய அறிவையும், அண்ணாவின் மொழிப்பற்றையும், பாரதிதாசன் போற்றியுள்ளார். தன்னலம் மறந்த இந்தப் பெரியோர்கள் காத்த சமுதாய மாண்புகள் சீரழியாமல் வளர வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மானவீரன் சிதம்பரன் என்ற பாரதிதாசனின் கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்ட கவியரங்கம் நடைபெற்றது. இதில், 32 கவிஞர்கள் பங்கேற்று கவிதை வாசித்தனர். புதுச்சேரி ஆலமரங்கள் தொடர்பான ஓவியப் போட்டியில் பங்கேற்றுத் தேர்வான 50 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, தேன்மொழி வரவேற்றார். அரிமா சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜு, ஓவியர் பி.சுகுணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவில் மணியம்மை நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT