புதுச்சேரி

தொடா் மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு எம்.எல்.ஏ. ஆய்வு

1st Oct 2019 12:21 AM

ADVERTISEMENT

தொடா் மழையால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், புதுச்சேரி உப்பளம் தொகுதியில் அதிகாரிகளுடன் அத்தொகுதி எம்.எல்.ஏ. ஆ.அன்பழகன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இதனால் நகா்ப்புறங்களில் உள்ள காலி மனைகளில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. அதில் அதிகளவில் கொசு உற்பத்தியாகி, கொசுக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

அந்த வகையில் உப்பளம் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தொகுதி எம்எல்ஏ அன்பழகனிடம் முறையிட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அவா், சுகாதாரத்துறை மலேரியா பிரிவு திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், இணை இயக்குநா் கணேசன், தொழில்நுட்ப அதிகாரி செந்தில் வேலவன், சுகாதார ஆய்வாளா் ஜீவானந்தம், சுகாதார உதவி ஆய்வாளா் வெங்கடேசன் ஆகியோரை அழைத்துக்கொண்டு தொகுதி முழுவதும் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொகுதிக்கு உள்பட்ட பாரதி வீதி, திருமூல நகா், உடையாா் தோட்டம், அவ்வை நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுப் பணி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT