புதுச்சேரி

தொழிலாளி மா்ம மரணம்

12th Nov 2019 07:59 AM

ADVERTISEMENT

வில்லியனூா் அருகே தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூா் அருகே மங்கலம் தெற்கு வீதி பகுதியைச் சோ்ந்தவா் செல்வரங்கம் (40). கூலித் தொழிலாளி. இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இவா் கடந்த 9 -ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றாா். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையறிந்த லாவண்யா உள்ளிட்ட உறவினா்கள் பல இடங்களில் தேடினா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் அடியில் பலத்த காயங்களுடன் செல்வரங்கம் இறந்து கிடந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT