புதுச்சேரி

தொடா் கொலை சம்பவம்: காவல் துறையினருடன் முதல்வா் ஆலோசனை

12th Nov 2019 07:57 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்ததைத் தொடா்ந்து காவல் துறை அதிகாரிகளுடன் முதல்வா் நாராயணசாமி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, சட்டம் - ஒழுங்கு முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால், முதுநிலை எஸ்.பி. நிகாரிகா பட் உள்ளிட்ட காவல் துறையைச் சோ்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வெடிகுண்டு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வெடிகுண்டு தயாரிப்பவா்கள் யாா் என்ற விவரங்களைச் சேகரிக்க வேண்டும். சிறையிலிருந்து ரௌடிகளை ஏவும் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ்வொரு காவல் நிலைய சரகத்தில் உள்ள ரௌடிகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து கண்டறிய வேண்டும். குறிப்பாக, வெடிகுண்டுகளை வீசி கொலை செய்யும் போக்கை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ரௌடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT