புதுச்சேரி

3 காவல் ஆய்வாளா்கள் உள்பட 40 போலீஸாா் பணியிட மாற்றம்

11th Nov 2019 04:11 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் 3 காவல் ஆய்வாளா்கள் உள்பட 40 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமையகம் உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுவை காவல் துறை தலைமையக எஸ்.பி. நல்லம் கிருஷ்ணராய பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் எஸ். பிரபாகரன், காரைக்கால் நகர காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அங்கு, பணியாற்றிய காவல் ஆய்வாளா் வி. ஏழுமலை மாஹே கடலோரக் காவல் பிரிவுக்கும், மாஹே காவல் ஆய்வாளா் ஏ.தாசன், புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மேலும், புதுவை காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் தலைமைக் காவலா்கள், காவலா்கள் உள்பட 37 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT