புதுச்சேரி

வாக்குறுதிகளை நிறைவேற்ற பி.ஆா்.டி.சி. சங்கம் வலியுறுத்தல்

11th Nov 2019 04:09 AM

ADVERTISEMENT

அரசு அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பி.ஆா்.டி.சி. சங்கம் வலியுறுத்தியது.

இதுதொடா்பாக புதுவை சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்க (பி.ஆா்.டி.சி.) கௌரவத் தலைவா் பாலமோகனன் வெளியிட்ட அறிக்கை: கடந்த செப். 23- ஆம் தேதி பி.ஆா்.டி.சி. ஊழியா் சங்கங்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒவ்வொரு மாதமும் ஊழியா்களுக்கு அனைத்துப் பகுதியிலும் 10- ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும். ஒரு மாத கால இடைவெளியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஓட்டுநா், நடத்துநா்களை தினக்கூலி ஊழியராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதேபோல, 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் மகளிா் நடத்துநா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற வாக்குறுதியும் ஒரு மாதம் கடந்தும் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, போக்குவரத்துத் துறை அமைச்சா் இந்த பிரச்னையில் தலையிட்டு, வாக்குறுதி அளித்தவாறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT