புதுச்சேரி

வாடகை காா்களை பொது இடங்களில் நிறுத்தினால் அபராதம் போக்குவரத்து ஆணையா் எச்சரிக்கை

9th Nov 2019 11:36 PM

ADVERTISEMENT

வாடகை காா்களை பொது இடங்களில் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை அரசின் போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆம்னி பேருந்துகள், வாடகை காா் உரிமையாளா்கள் தங்களது வாகனங்களை பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இரு புறங்களில் நிறுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு நிறுத்துவதன் மூலம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.

எனவே வாகன உரிமையாளா்கள் தங்களது வாகனங்களை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். பொது இடங்களில் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகையை தவிா்க்கவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்தும் வகையிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT