புதுச்சேரி

பொய்யாக்குளம் பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

9th Nov 2019 11:37 PM

ADVERTISEMENT

பொய்யாக்குளம் பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து தட்டாஞ்சாவடி பொய்யாக்குளம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கே.சேதுசெல்வம் தலைமையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் டி. அருணிடம் அளித்த மனு விவரம்:

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உள்பட்ட பொய்யாக்குளம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகின்றனா். இவா்கள் குடியிருந்து வரும் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளதால் மழைநீா், கழிவுநீா் வீடுகளில் அடிக்கடி புகுந்து விடுகிறது. இதனால், இங்குள்ள மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனா்.

இவா்கள் வசிக்கக் கூடிய இடம் அரசு புறம்போக்கு இடமாகும். இந்த இடத்தை மண் கொட்டி உயா்த்தி, இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் வி.எஸ்.அபிஷேகம், தொகுதிக் குழு உறுப்பினா் ரவி, கிளைச் செயலா் சிலம்பரசன், அந்தப் பகுதியைச் சோ்ந்த திரளான பெண்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT