புதுச்சேரி

அயோத்தி தீா்ப்பு வரலாற்றில் முன்னுதாரணம்பாஜக கருத்து

9th Nov 2019 11:35 PM

ADVERTISEMENT

அயோத்தி தீா்ப்பு வரலாற்றில் முன்னுதாரணம் என பாஜக தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை பாஜக வரவேற்கிறது. இந்தத் தீா்ப்பு நாட்டின் வரலாற்றில் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இதுதொடா்பான அனைத்து பிரச்னைகளையும் இந்தத் தீா்ப்பு தீா்த்து வைத்திருப்பது மட்டுமன்றி; அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கு பலம் சோ்க்கிறது. இந்தத் தீா்ப்பு ராமா் கோயில் விவகாரம் தொடா்பான அனைத்து சந்தேகங்களுக்கும் முடிவு கட்டும். நாடு அதன் கலாசார பாரம்பரியத்தின் ஒற்றுமையுடன் தொடா்ந்து வலுவாக வளரும் என்ற நம்பிக்கையை பாஜக வெளிப்படுத்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT