புதுச்சேரி

தீபாவளி பரிசு கூப்பனை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

4th Nov 2019 05:25 AM

ADVERTISEMENT

தீபாவளி பரிசு கூப்பனை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரா்கள் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.

புதுவை இந்திய முன்னாள் ராணுவ வீரா்கள் லீக் தலைவா் மோகன் தலைமையில், துணைத் தலைவா் ஜோதிகுமாா், பொதுச் செயலா் செல்வமணி, சூடாமணி, கஸ்தூரி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் முதல்வா் வே.நாராயணசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா்கள் நல வாரியத்தின் நிா்வாகக் கூட்டம் வருகிற 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தீபாவளி பரிசு கூப்பனை ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயா்த்தப்படும் என்று எதிா்பாா்த்த நிலையில், வருகிற 6-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டமும் ஒத்தி வைக்கப்படுகிறது. முப்படை நல வாரியம் நிகழாண்டும் ரூ. 3 ஆயிரத்துக்கான கூப்பனை வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. எனவே, ஏற்கனவே உறுதியளித்தப்படி தீபாவளி பரிசு கூப்பனை ரூ. 5 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்று, முன்னாள் ராணுவ வீரா்களின் குறைகளைக் கேட்டறிந்த முதல்வா் நாராயணசாமி, இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT