கல்வி ஊக்கப் பரிசு பெற ஜூன் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் கல்வி ஊக்கப் பரிசு பெற விரும்பும் மீனவ சமுதாய மாணவ, மாணவிகள்

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் கல்வி ஊக்கப் பரிசு பெற விரும்பும் மீனவ சமுதாய மாணவ, மாணவிகள் ஜூன் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலர் உத்திராடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் காலாப்பட்டு தொகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கப் பரிசுத் தொகையாக ரூ. 5000,  ரூ. 3000, ரூ. 2000 
வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. மேலும், பத்து மாணவர்களுக்கு ரூ. 500 ஆறுதல் பரிசும் வழங்க முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி தற்போது தேர்வு முடிவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காலாப்பட்டு தொகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் உரிய விண்ணப்பப் படிவத்தை சங்கத்தில் பெற்று ஜூன் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் கண்ணன், துணைச் செயலர் பிரகாஷ், பொருளாளர் உதயன் உள்ளிட்ட சங்க  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com