புதுச்சேரி

குளங்களைத் தூர்வார எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

29th Jun 2019 09:19 AM

ADVERTISEMENT

நிலத்தடி நீரைப் பாதுகாக்க திருபுவனை தொகுதியில் உள்ள குளங்களைத் தூர்வார வேண்டும் என அந்த தொகுதி எம்.எல்.ஏ. கோபிகா வலியுறுத்தினார்.
இதுகுறித்து மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரிடம் அவர் அளித்த மனு:
சிலுக்காரிபாளையம் - மைலம் பாதை, கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம், விநாயகம்பட்டு, கலித்தீர்த்தாள்குப்பம் - பொன்னம்பலம் நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலைகளை அமைக்க வேண்டும். 
திருபுவனைபாளையம் முதல் நல்லூர் கிராமம் வரையான இணைப்புச் சாலையைச் 
சீரமைத்துத் தர வேண்டும்.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க திருபுவனை நாபாளையம் குளம், கலிதீர்த்தாள்குப்பம் விநாயகர் குளம், மதகப்பட்டுபாளையம் மேச்ச குளங்களை உடனடியாகத் தூர்வார 
வேண்டும். திருபுவனைபாளையம் கிருஷ்ணா நகரில் புதிதாக குடிநீர் குழாய்களை அமைக்க வேண்டும். வம்புப்பட்டு பகுதியில் புதிய ஆழ்த்துளை கிணறு அமைக்க வேண்டும். 
திருவண்டார்க்கோயில் ஞானசெüந்தரி நகருக்கு 
புதிதாக குடிநீர் குழாய் இணைப்புகள் தர வேண்டும். திருபுவனை தொகுதியில் உள்ள புதிய நகர்களுக்கு மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
திருவண்டார்கோயில் பெரியபேட் , சின்னபேட், இந்திரா நகர், திருபுவனை தோப்பு தெரு, ஒட்டையர் வீதி, திருபுவனை பெரியபேட், சின்னபேட், மதகடிப்பட்டுபாளையம் கஸ்துரிபாய் நகர், நல்லூர்பேட், மதகடிப்பட்டு புதுநகர், கலிதீர்த்தாள்குப்பம் பேட், ஆண்டியார்பளையம் பேட், சன்னியாசிகுப்பம் பேட், சோரப்பட்டு பேட், விநாயகம்பட்டு பேட், செல்லிப்பட்டு பேட் மற்றும் ஊர், நல்லூர் குச்சிப்பாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளில் ஈமக்கிரியை மண்டபங்களை கட்டித் தரவேண்டும்.
தொகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடத்தைச் தேர்வு செய்ய வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT