புதுச்சேரி

வழக்குரைஞர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம்

29th Jul 2019 10:02 AM

ADVERTISEMENT

புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்க வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
சங்கத் தலைவர் எஸ். முத்துவேல் தலைமை வகித்தார்.  பொதுச் செயலர் தாமோதரன் வரவேற்றார். கூட்டத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. 
புதுவை பிரதேசத்துக்கு தனி உயர் நீதிமன்றத்தை புதுச்சேரியில் அமைக்க வேண்டும். மாவட்ட நீதிபதி நேரடி நியமனத்துக்கு ஏற்கெனவே இருந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வை ரத்து செய்துவிட்டு, அந்தத் தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு நிலைத் தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும். மாவட்ட நீதிபதிகளை வழக்குரைஞர்களிலிருந்து தேர்வு செய்து நியமிக்க வேண்டும்.
புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் மற்றும் புதுவை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT