புதுச்சேரி

பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு, உறைவிடப் பள்ளி அமைக்கக் கோரிக்கை

29th Jul 2019 10:03 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்காக உண்டு, உறைவிடப் பள்ளி அமைக்க வேண்டும் என்று பழங்குடியினர் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்தது.
 இது குறித்து புதுவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் வெ.வைத்திலிங்கத்திடம், இந்த அமைப்பின் மாநிலச் செயலர் மா.ஏகாம்பரம் ஞாயிற்றுக்கிழமை அளித்த மனு விவரம்: 
 தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பழங்குடியின மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் உண்டு, உறைவிடப் பள்ளிகள் உள்ளன.  
ஆனால், புதுவையில் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தனியாக உண்டு, உறைவிடப் பள்ளிகள் இல்லை. 
 எனவே, புதுவையில் வாழும் பழங்குடியின மாணவ, மாணவிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், தனியாக உண்டு, உறைவிடப் பள்ளி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT