புதுச்சேரி

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

27th Jul 2019 10:18 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.
புதுச்சேரி காமராஜர் நகர், நாராயண தாஸ் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (63). இவர், தனியார் மோட்டார் பைக் விற்பனையகத்தில்  பணியாற்றி வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை தனது பைக்கில் புதுச்சேரி - கடலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். நைனார்மண்டபம் அருகே சென்ற போது, திடீரென ஒருவர் சாலையின் குறுக்கே சென்றதால் சுப்பிரமணியன் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 
அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார்.
மற்றொரு விபத்து: புதுச்சேரி செல்லான் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (73). இவர், புதுச்சேரி பாரதி வீதி, செட்டித் தெரு வழியாக பைக்கில் வந்துள்ளார். அப்போது, திடீரென மோட்டார் பைக்கில் இருந்து நடராஜன் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார்.
இந்த இரு விபத்துகள் குறித்து போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து,  விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT