புதுச்சேரி

இஸ்லாமியர்களை முடக்கும் செயலில் என்ஐஏ: எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு

22nd Jul 2019 08:12 AM

ADVERTISEMENT

இஸ்லாமியர்களை முடக்கும் செயலில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) ஈடுபட்டு வருவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் முபாரக் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தமிழகம், புதுவையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சிறுபான்மையின இஸ்லாமியர்கள் மற்றும் மதச் சார்பற்ற அமைப்புகளை முடக்கும் செயல்களில் என்ஐஏ அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதனால், அந்த அமைப்பை கலைக்க வேண்டும்.
என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். என்.ஐ.ஏ. அமைப்பை கலைக்க வலியுறுத்தி, வரும் 27-ஆம் தேதி சென்னையில் எஸ்.டி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுவை அரசு கொள்கை முடிவு எடுத்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் முபாரக்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT