புதுவை பல்கலை.யில் கூடுதல் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளைக் கட்ட வேண்டும் என்று ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
கடந்த சில நாள்களாக புதுச்சேரியில் ஓரளவு மழை பெய்து வரும் நிலையில், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளில் நீர் சேமிக்கப்பட்டுள்ளதா, என்ன நிலையில் தொட்டிகள் உள்ளன என அவர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். சுனாமி குடியிருப்பில் மேலும் 2 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்துக்கு சென்ற அவர், அங்குள்ள மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை ஆய்வு செய்தார். பல்கலை.யில் கூடுதல் எண்ணிக்கையில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, ஆளுநர் மாளிகை அதிகாரிகள், நகரமைப்புத் திட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.