புதுச்சேரி

பள்ளிகளில் வேலைவாய்ப்பகப் பதிவு  

12th Jul 2019 08:45 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெற்றவர்கள் வேலைவாய்ப்பகப் பதிவை அந்தந்தப் பள்ளிகளிலேயே செய்து வருகின்றனர்.
 அரசுத் தேர்வுத் துறை மூலம் பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு வந்து அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுச் சென்றனர்.
 மேலும், அந்தந்தப் பள்ளிகளிலேயே அமைக்கப்பட்டிருந்த மையத்தில் வேலைவாய்ப்பகப் பதிவையும் மேற்கொண்டனர்.
 பள்ளிகளில் இருந்து மாற்றலாகிச் சென்றவர்கள், தட்டாஞ்சாவடியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மதிப்பெண் சான்றிதழைப் பதிவு செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT