அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்எல்ஏ, பொதுச் செயலர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம் ஆகியோர் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் மகாலிங்கத்திடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவின் விவரம்:
கடந்த 7 ஆண்டுகளாக வில்லியனூர் - அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ஓராண்டில் முடிக்க வேண்டிய இந்த மேம்பாலப் பணி, மத்திய அரசு அளிக்க வேண்டிய ரூ. 12 கொடி நிதியை அளித்தும், இதுவரை பணி முடிக்கப்படாமல் உள்ளது.
மாநில அரசு மக்களின் துன்பங்களைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக நடந்து வருகிறது. இதுநாள் வரை இந்த மேம்பாலத்தைக் கட்டி முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பொதுமக்களின் சிரமங்களைப் புரிந்து கொண்டு,
உடனடியாக மேம்பாலப் பணியை விரைந்து முடித்து, மக்கள்
பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அந்த மனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.