புதுச்சேரி

தேசிய வன வார விழா தொடக்கம்

4th Jul 2019 09:04 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் தேசிய வன வார விழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
 ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் வாரம் தேசிய வன வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, வனங்களை பாதுகாப்பது குறித்த வழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில், இயற்கை சார்ந்த அமைப்புகள் இணைந்து மரக்கன்றுகளை வீராம்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் நட்டு, பராமரித்து வருகின்றன.
 பசுமைத் தூண்கள் அமைப்பினர் சார்பில் நடைபெற்று வரும் வனம் உருவாக்கும் நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வன வார விழா தொடக்க நிகழ்ச்சி வீராம்பட்டினத்தில் கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. இதில், பசுமைத் தூண்கள் அமைப்பின் நிர்வாகி லிங்கேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.
 நிகழ்ச்சியில் புதுவை அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருண்நாகலிங்கம் பேசியதாவது: பசுமைத் தூண்கள் அமைப்பினர் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, வளர்க்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பரிசுகளை வழங்கி வருகின்றனர். கடற்கரை உப்புத் தன்மையை தாங்கி வளரக்கூடிய கடற்காய், பூவரசு உள்ளிட்ட மரங்களை இவர்கள் நட்டு வளர்த்து வருகின்றனர். இவர்களுடன் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை ஆனந்தன், இளைஞர்கள் விடுதி அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து செயலாற்றி வருகின்றன என்றார் அவர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT