புதுச்சேரி

உறுப்பினர்கள் சேர்க்கைப் பயிலரங்கம்  

2nd Jul 2019 08:46 AM

ADVERTISEMENT

பாஜகவின் உறுப்பினர்கள் சேர்க்கைப் பயிலரங்கம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 பயிலரங்குக்கு புதுவை மாநில பாஜக தலைவர் வி. சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநில உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் ஏம்பலம் ஆர். செல்வம் உறுப்பினர் சேர்க்கை குறித்து நோக்கவுரையாற்றினார்.
 தமிழ் மாநில அமைப்பு பொதுச் செயலர் கேவச. விநாயகம் உறுப்பினர் சேர்க்கைப் பயிலரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். நிகழ்வில் திரளான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 முன்னதாக, கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் எஸ். ரவிச்சந்திரன் வரவேற்றார். தமிழ் மாநிலப் பொதுச் செயலர் என். நரேந்திரன் தொடக்கவுரையாற்றினார். மாநில உறுப்பினர் சேர்க்கை இணைப் பொறுப்பாளர் என். நாகராஜன் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT