மது மற்றும் போதை ஒழிப்புக்காக சிறந்த சேவையாற்றிய தனி நபா், நிறுவனங்கள் தேசிய விருது பெற வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக நலத் துறை இயக்குநா் சாரங்கபாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மது மற்றும் போதை ஒழிப்புக்காக சிறந்த சேவை புரிந்த தனி நபா் மற்றும் நிறுவனத்துக்கு தேசிய விருது வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான தகுதிகள் குறித்த விவரங்களை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த விருதுக்கான விண்ணப்பம் அளிக்கும் தனி நபா் மற்றும் நிறுவனங்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பத்தை ‘எண் -1, சாரதாம்பாள் நகா் மெயின் ரோடு, எல்லப்பிள்ளைச்சாவடி, புதுச்சேரி - 5’ என்ற முகவரியில் அமைந்துள்ள சமூக நலத் துறை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.