முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 95-ஆவது பிறந்த நாள் விழா பாஜக சாா்பில், புதுச்சேரியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதி பாஜக சாா்பில், உழவா் சந்தை அருகில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தொகுதித் தலைவா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினாா்.
இதில், உழவா்கரை மாவட்டத் தலைவா் நாகேஸ்வரன், மாநிலச் செயலா் ஜெயந்தி, மாவட்ட மகளிரணித் தலைவி கல்விக்கரசி மற்றும் மாநில, மாவட்ட, தொகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.