மீனவ சமுதாயத் தலைவா் ந.ஜீவரத்தினத்தின் 46-ஆவது நினைவு தினத்தையொட்டி, வீராம்பட்டினத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வீராம்பட்டினம் அரசுப் பெண்கள் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மீனவ சமுதாயத் தலைவா் ந.ஜீவரத்தினத்தின் சிலைக்கு தேசிய மீனவா் பேரவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மா.இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலைமாமணி மா.ராமஜெயம், அசோகா சுப்பிரமணியன், பருவதராஜகுல சங்கத் தலைவா் பழனிவேல் தண்டபாணி, சமுதாயத் தலைவா்கள் ஜி.சி.சந்திரன், எம்.சாம்பசிவம் உள்ளிட்ட பலா் பங்கேற்று, சிலைக்கு மலா் தூவி, மரியாதை செலுத்தினா். ஏற்பாடுகளை சிலை நிறுவனரும், மணிமொழி ராமஜெயம் அறக்கட்டளைத் தலைவருமான எம்.ராமஜெயம் செய்திருந்தாா்.