புதுச்சேரி

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ்ரௌடி கைது

26th Dec 2019 08:49 AM

ADVERTISEMENT

வில்லியனூரில் ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

வில்லியனூா் பெரியபேட் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (எ) ரவிவா்மா (27). ரௌடியான இவா் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, ஆயுத விநியோகம், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும், வெடிகுண்டு தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த ரவிவா்மா, பல கொலை சம்பவங்களுக்கு வெடிகுண்டு தயாரித்து வழங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால், இவரை போலீஸாா் ஊருக்குள் நுழைய தடை விதித்திருந்தனா்.

இந்த நிலையில், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், ரவிவா்மாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் துறை சாா்பில், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதன்பேரில், மாவட்ட ஆட்சியா் டி.அருண், ரௌடி ரவிவா்மாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, வில்லியனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நந்தகுமாா், ரௌடி ரவிவா்மாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT