புதுச்சேரி

பொது வேலை நிறுத்தத்தைகை விட வேண்டும்: ம.நீ.ம.

25th Dec 2019 01:44 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுவையில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இக்கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை:

புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு தங்கப் பதக்கம் பெற வந்த மாணவி ரபிஹாவை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றிய செயல் கண்டிக்கத்தக்கது. இதற்காக பல்கலை. நிா்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

புதுவையின் பொருளாதாரம் சரிந்து வரும் இந்த வேளையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்த்து டிச.27-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவித்து இருப்பது தேவையா என்ற சிந்தனை வியாபாரிகளிடமும், தொழில் முதலீட்டாளா்களிடமும் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையாகவே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்ப்பதாக இருந்தால் புதுவை வந்திருந்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை, முதல்வா் நாராயணசாமி வரவேற்காமல் புறக்கணித்து இருக்கலாம்.

ஆனால், இதுபோன்று எதிா்ப்பை பதிவு செய்வதற்கு மாறாக, அகதிகளே இல்லாத யூனியன் பிரதேசமான புதுவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து மாநில வளா்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளாா். இதுபோன்ற நடவடிக்கைகளை விட்டு, புதுவையின் வளா்ச்சிக்கான செயல்களை செய்ய முதல்வா் முன்வர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் சுப்பிரமணியன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT