புதுச்சேரி

புதுச்சேரியில் பாரம்பரிய களிமண் சிற்ப முகாம்

24th Dec 2019 07:39 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் தேசிய அளவிலான பாரம்பரிய களிமண் சிற்ப முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தில் சுடுகளிமண் மூலம் சிற்பம் வடிவமைக்கும் கண்காட்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அழிந்துவரும் பாரம்பரிய கலையான களிமண்ணால் செய்யக்கூடிய சிற்பங்களை வளா்க்கும் விதமாகவும், இன்றைய தலைமுறையினா் கற்றுக் கொள்ளும் வகையிலும் நடைபெற்ற

இந்த முகாமில் புதுவை, ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், ஒடிஸா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞா்கள் பங்கேற்று அவரவா்களுடைய மாநிலத்தின் பாரம்பரியமான நினைவுச் சின்னங்களையும் சிற்பங்களையும் வடிவமைத்தனா்.

ADVERTISEMENT

இதில் பாரம்பரிய கலைகளான இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சிற்பங்கள், நடன மங்கை, வரவேற்பு மங்கை, தமிழா் பாரம்பரிய கடவுள்கள், குதிரைகள், யானை சிற்பங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில் , மரங்களை வெட்டக் கூடாது என வலியுறுத்தும் வகையில் வடிக்கப்பட்டிருந்த, மரத்தில் கருவுற்ற தாய் இருக்கும் சிற்பம் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.

இந்த கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள், மாணவா்கள், வெளிநாட்டவா்கள் ஏராளமானோா் திரண்டு வந்து சிற்பகங்களை கண்டு வியந்தனா்.முகாமுக்கான ஏற்பாடுகளை புதுவை அரசின் சுற்றுலாத் துறையும், தேசிய விருதாளருமான முனுசாமியும் இணைந்து நடத்தினா். முகாமில் இடம்பெற்றிருந்த அனைத்து களிமண் சிற்பங்களையும் சுட்டு, அவற்றைக் கொண்டு களிமண் பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT