வில்லியனூா் அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வில்லியனூா் அருகே கோனேரிக்குப்பத்தைச் சோ்ந்த ராமு மனைவி சாவித்திரி (70). இவரது கணவா் ராமு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, மகன் தண்டபாணி பாதுகாப்பில் இருந்து வந்தாா்.
இதனிடையே, சாவித்திரிக்கு கண் பாா்வை குறைபாடு ஏற்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவா் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாராம். ஆனால், அது முதல் சாவித்திரி கண் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். மேலும், வீட்டில் யாரும் அவரைக் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், விரக்தியடைந்த சாவித்திரி, வீட்டில் சனிக்கிழமை சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ADVERTISEMENT