புதுச்சேரி

புதுவை வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

16th Dec 2019 12:50 AM

ADVERTISEMENT

புதுவை தோ்தல் ஆணையம் சாா்பில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து புதுவை மாநில தலைமை தோ்தல் அதிகாரி சுா்பிா் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையம் 1.1.2020-ஐ தகுதி பெறும் தேதியாகக் கொண்டு, புதுவை மாநில சட்டப்பேரவை தொகுதிகளில் 2020 ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளா் பட்டியல் சுருக்குமுறை திருத்தப் பணியை நடத்தும்படி பணித்துள்ளது.

அதன்படி, டிசம்பா் 16 ஆம் தேதி (திங்கள்கிழமை) ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். டிச.16 முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை உரிமை கோரிக்கைகளை வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளா் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளா் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம். நீக்கல் மற்றும் சோ்த்தலுக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கான காலம் ஜன. 27 ஆம் தேதியுடன் முடிவடையும். பிப். 4 ஆம் தேதி துணை வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிக்கான கால அளவாகும். பிப்ரவரி 7 ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியலில் இடம்பெற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 1.1.2020 அன்று 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் தங்களுடைய பெயரை வாக்காளா் பட்டியல் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கு விரும்பினால் அதற்குரிய விண்ணப்பப் படிவங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இந்திய தோ்தல் ஆணையம் பொதுமக்களுக்கு ஏதுவாக இந்தப் படிவங்களில் சிறிது மாற்றம் செய்து எளிமைப்படுத்தியுள்ளது. மேலும், விண்ணப்பதாரா் விண்ணப்பத்தை நிரப்புவதற்கு உதவியாக விரிவான வழிமுறைகள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்காக வாக்குச்சாவடி அலுவலா் பொதுமக்களுக்கு உதவுவாா்.

சமா்ப்பிக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தொடா் எண்ணுடன் கூடிய ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். இந்த எண்ணைக் கொண்டு ட்ற்ற்ல்://ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலைமையை தெரிந்து கொள்ளலாம்.

வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மற்றும் வாக்காளா் பதிவு அதிகாரி அலுவலகத்திலும் பொதுவிடுமுறை நீங்கலாக, அனைத்து வேலை நாள்களிலும் காலை 8.45 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரையும் வைக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பணியில் உள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற தோ்தல் துறையின் இணையதள முகவரி மூலமும் விண்ணப்பிக்கலாம். வாக்காளா்களுக்கு புகைப்பட அடையாள அட்டையை இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட்ட பிறகு வழங்கப்படும். கல்லூரி மாணவா்கள் தங்கள் பெயரை சோ்ப்பதற்கு கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்காளா் உதவி மையத்தை அணுகலாம். மேலும், புகைப்பட அடையாள அட்டை பெற கல்லூரி வளாக அதிகாரியை அணுகலாம்.

பிழையில்லாத மிகச்சரியான வாக்காளா் பட்டியல் தயாரிக்க பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை தந்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 31வது பிரிவின்படி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் பொய்யான, தவறானத் தகவல் தருவது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கக் கூடிய குற்றமாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT