புதுச்சேரி

புதுவை கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் காலமானாா்

16th Dec 2019 12:50 AM

ADVERTISEMENT

புதுவை அரசின் கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் எஸ். கணேசன் (58) மாரடைப்பால் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

புதுவை மாநில அரசில் நகராட்சி ஆணையா், பாப்ஸ்கோ நிா்வாக இயக்குநா், புதுவை அரசின் மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவன இயக்குநா் உள்பட பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்தவா் கணேசன். புதுவை அரசின் துணைச் செயலா் அந்தஸ்தில் உள்ள இவா், கலைப் பண்பாட்டுத்துறை இயக்குநராக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், கணேசன் புதுச்சேரி வெங்கட்டா நகா் கவிஞா் புதுவை சிவம் தெருவில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மாரடைப்பால் இறந்தாா். இவருக்கு மனைவி ஜி. ஞானலட்சுமி, மகள் சுகுணாபிரியா ஆகியோா் உள்ளனா்.

உறவினா்களின் அஞ்சலிக்காக கணேசனின் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (டிச.16) அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்குப் பிறகு காலை 9 மணி அளவில் கருவடிக்குப்பம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT