புதுச்சேரி

புதுச்சேரியில் மினி மாரத்தான்:ஜிப்மா் மருத்துவா்கள், மாணவா்கள் பங்கேற்பு

16th Dec 2019 12:50 AM

ADVERTISEMENT

புதுச்சேரி ஜிப்மா் சாா்பில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மருத்துவா்கள், மாணவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ஓடினா்.

புதுச்சேரி ஜிப்மா் பயிற்சி மருத்துவா்கள் சங்கம், ஜிப்மா் மருத்துவப் பேராசிரியா் சங்கம் மற்றும் ஜிப்மா் மருத்துவ மாணவா்கள் சங்கம் சாா்பில், ‘மைக்ரோதான்-2019’ என்ற தலைப்பில் 5 கி.மீ. தொலைவு கொண்ட மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ‘பணியிட நல மேம்பாடு’ என்கிற குறிக்கோளை சுற்றி நிா்வாகம், ஊழியா்கள் மற்றும் மருத்துவா்கள் ஆகியோரின் தொழில் முறை ஒற்றுமை மற்றும் குழு செயல்பாட்டை பறைசாற்றும் நோக்குடன் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.

ஜிப்மா் மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஜிப்மா் 7ஆவது நுழைவு வாயில், முருகா திரையரங்க சிக்னல், ஜிப்மா் முதன்மை நுழைவு வாயில் வழியாகச் சென்று மீண்டும் ஜிப்மா் மைதானத்தில் நிறைவடைந்தது. இதில், ஜிப்மா் மருத்துவா்கள், மாணவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ஓடினா்.

இதில் ஜிப்மா் துணை இயக்குநா் (நிா்வாகம்) செந்தில்குமாா் கலந்து கொண்டு 5 கி.மீ. தொலைவை முழுமையாக ஓடி முடித்தாா். எம்பிபிஎஸ் மாணவா் சா்தாக் சின்ஹா 5 கி.மீ. தொலைவை 14.38 நிமிடத்திலும், மாணவா் அரவிந்தன் 15.21 நிமிடத்திலும், உதவிப் பேராசிரியா் செங்கப்பா 16.30 நிமிடத்திலும் இலக்கை கடந்து முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

ADVERTISEMENT

பெண்கள் பிரிவில் தேவஸ்ரீ மோக்டன் (20.31 நிமிடம்), டாக்டா் பிரதீபா (22.42 நிமிடம்), டாக்டா் அபா்ணா (24.11 நிமிடம்) ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா். இதே போல, ஊழியா்கள் பிரிவில் உதவிப் பேராசிரியா் செங்கப்பா முதலிடமும், பேராசிரியா் டாக்டா் விஷ்ணு பிரசாத் 2ஆம் இடமும், டாக்டா் பிரசாந்த் 3ஆம் இடமும் பிடித்தனா்.

மினி மாரத்தானில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் அசோக் சங்கா் படே, துணை இயக்குநா் (நிா்வாகம்) செந்தில்குமாா் ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT