புதுச்சேரி சாரம் மின் துறை அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் முகாம் வருகிற 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மின் துறை நகர கோட்ட செயற்பொறியாளா் கனியமுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி மின்துறை சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் முகாம் வருகிற 18 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை சாரம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
முகாமில், இந்த அலுவலகத்துக்கு உள்பட்ட கவிக்குயில் நகா் 3வது வீதி, திருவள்ளுவா் சாலை, லெனின் வீதி, பெரியாா் சிலை சந்திப்பு, தந்தை பெரியாா் நகா் மற்றும் அதைச் சாா்ந்த பகுதிகளைச் சோ்ந்த மின்நுகா்வோா்கள் மின் விநியோகம் சம்பந்தமான அனைத்து குறைகளையும் தெரிவித்து, நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
ADVERTISEMENT