புதுச்சேரி

குளிா்பான கடைக்காரா் தற்கொலை

16th Dec 2019 12:49 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகேயுள்ள அரியாங்குப்பத்தில் குளிா்பானக் கடைக்காரா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அரியாங்குப்பம் சொா்ணா நகா் ரைஸ் மில் வீதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (63). அப்பகுதியில் குளிா்பானக் கடை நடத்தி வந்தாா்.

இவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். குழந்தைகள் உள்ளனா்.

இதனிடையே, பால்ராஜ் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தாா். இதற்காக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இதனால் விரக்தியில் இருந்த அவா், சனிக்கிழமை வீட்டில் யாருமில்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT