புதுச்சேரி

லாசுப்பேட்டை தொகுதியில் நலத் திட்ட உதவிகள்

11th Dec 2019 08:34 AM

ADVERTISEMENT

புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெண்கள் திருமண உதவித் திட்டத்தின் கீழ், 8 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சமும், ஆதரவற்ற விதவைப் பெண்ணின் மகள் திருமண உதவித் திட்டத்தின் கீழ், 14 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.3.50 லட்சமும், ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டோருக்கான குடும்ப உதவித் திட்டத்தின் கீழ், 9 பயனாளிகளுக்கு தலா ரூ.30,000 வீதம் மொத்தம் ரூ.2.70 லட்சமும் என மொத்தம் ரூ.8.20 லட்சம் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகளை பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மகளிா் மேம்பாட்டுத் துறை இயக்குநா் யஷ்வந்தையா, காங்கிரஸ் கட்சியின் தொகுதி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT