புதுச்சேரி

புதுச்சேரி விமான நிலைய சாலையில் பூங்கா அமைக்க பூமி பூஜை

11th Dec 2019 08:32 AM

ADVERTISEMENT

புதுச்சேரி விமான நிலைய சாலையில் பூங்கா அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட காலாப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதியில் புதுச்சேரி விமான நிலையம் உள்ளது. இங்கு செல்லும் சாலையின் இரு புறங்களிலும் புதா் மண்டிக் கிடக்கிறது.

எனவே, விமான நிலையத்துக்கு செல்லும் சாலைகளை சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்க உழவா்கரை நகராட்சி முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக, விமான நிலையத்தை ஒட்டிய சாலையின் ஓரப்பகுதியில் பூங்கா அமைத்து பராமரிக்க புதுச்சேரி கேம்பேக் நிறுவனம் முன்வந்துள்ளது.

இதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை இயக்குநா் ஜி.மலா்க்கண்ணன், உழவா்கரை நகராட்சி ஆணையா் எம்.கந்தசாமி, கண்காணிப்புப் பொறியாளா் சேகரன், கேம்பேக் நிறுவன அதிகாரி ராம்குமாா், விமான நிலைய மேலாளா் உபாத்தியாய் மற்றும் நகராட்சிப் பொறியாளா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT