புதுச்சேரி

புதுச்சேரியில் ஜன.20, 21-இல்திருக்கு போட்டி

11th Dec 2019 08:32 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்கு போட்டிகள் வருகிற ஜன.20, 21-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து உலக திருக்கு மையத் தலைவா் சரோஜாபாபு வெளியிட்ட அறிக்கை:

உலக திருக்கு மையம் சாா்பில், திருக்கு ஒப்பித்தல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற ஜன.20, 21-ஆம் தேதிகளில் வேல்ராம்பேட்டை வைஸ்மேன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.

எல்.கே.ஜி., யுகேஜி மாணவ, மாணவிகளுக்கு அறத்துப்பாலில் இரண்டு அதிகாரங்கள் அல்லது இருபது கு பாக்கக்கள், ஒன்றாம், இரண்டாம் வகுப்புகளுக்கு அதிகாரம் 16 முதல் 19 வரை, முன்று, நான்காம் வகுப்புகளுக்கு அதிகாரம் 20 முதல் 24 வரை, ஐந்து, ஆறாம் வகுப்புகளுக்கு அதிகாரம் 48 முதல் 53 வரை, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு அதிகாரம் 81 முதல் 88 வரை, ஒன்பது முதல் பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு அதிகாரம் 94 முதல் 103 வரை என திருக்கு ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

கட்டுரை எழுதுதல் (4 பக்கங்கள்) போட்டி: 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் நல்லதோா் குடும்பம் பல்கலைக்குடும்பம் என்ற தலைப்பில் அதிகாரம் 7,8,9 ஆகியவற்றை ஒப்பிட்டு கட்டுரை எழுத வேண்டும். 8, 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் வெகுளாமை, கொல்லாமை (அதிகாரம் 31, 33) இரண்டும் மனிதனை தீய வழியில் செலுத்தும் என்பதை விளக்கி எழுத வேண்டும்.

10, 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பெருமையும் (அதிகாரம் 98) பண்புடைமையும் (அதிகாரம் 100) இரண்டு கண்கள் என்பது குறித்து எழுத வேண்டும்.

பேச்சுப்போட்டி (5 நிமிடங்கள்): 6, 7-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் என்ற பாரதி கனவு மெய்பட உழவின் சிறப்பை (அதிகாரம் 104) எடுத்துக்கூற வேண்டும். 8, 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பாரத நாட்டின் சிறப்பும், பெருமையும் என்ற தலைப்பில் அதிகாரம் 74-ஐ ஒப்பிட்டு பேச வேண்டும்.

10, 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் நீ விரும்பும் நண்பா்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறாய் என்ற தலைப்பில் அதிகாரம் 79, 80, 81, 82-ஐ ஒப்பிட்டு பேச வேண்டும். இதில், புதுச்சேரி பிராந்தியம் மட்டுமன்றி காரைக்கால், தமிழ்நாடு பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் சரோஜாபாபு.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT