புதுச்சேரி

புதுச்சேரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி

11th Dec 2019 08:32 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் எய்ஸ்ட் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சாா்பில், சா்வதேச எய்ட்ஸ் தின நிகழ்ச்சி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுகாதார இயக்குநா் மோகன்குமாா் வரவேற்றாா். சுகாதாரத் துறைச் செயலா் பிரசாந்த்குமாா் முன்னிலை வகித்தாா்.

சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். பின்னா், 2018 - 19ஆம் ஆண்டில் எய்ட்ஸ் தடுப்பு முறையில் சிறப்பாகப் பணியாற்றிய சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனத்துக்கு விருது வழங்கினாா். மேலும், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் செய்தவா்களை அமைச்சா் பாராட்டினாா்.

நிறைவாக, எய்ட்ஸ் விழிப்புணா்வை மையமாக வைத்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் பரிசு வழங்கி பாராட்டினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் ரவி, மக்கள் தொடா்பு அலுவலா் ஆத்மநாதன், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநா் மருத்துவா் கோவிந்தராஜன் நன்றி கூறினாா்.

முனனதாக நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணியை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடக்கிவைத்தாா். இந்தப் பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலிய மாணவ, மாணவிகள் பங்கேற்று எய்ட்ஸ் விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா். இதில், எமன், சித்ரகுப்தன் வேடமணிந்து மாணவா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT