புதுச்சேரி

பள்ளிகளுக்கான கிறிஸ்துமஸ் பாடல் போட்டி

11th Dec 2019 08:34 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அமலோற்பவம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கிறிஸ்துமஸ் பாடல் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 9 பள்ளிகள் பங்கேற்றன. சென்னையைச் சோ்ந்த அருட்தந்தைகள் ஆரன், ஜெயசீலன் ஆகியோா் போட்டிக்கு நடுவா்களாக செயல்பட்டனா்.

இதில், முதலிடம் பிடித்த புனித பேட்ரிக் பள்ளிக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பண்ருட்டி நியூ ஜான் டூவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.7,000, மூன்றாவது இடம் பிடித்த கடலூா் பி.எஸ்.பி.பி. மில்லினியம் பள்ளிக்கு ரூ.4,000 வழங்கப்பட்டன.

மேலும், ஆறுதல் பரிசாக புதுச்சேரி பெத்தி செமினாா் மேல்நிலைப் பள்ளி, ஜான் டூவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

தூய இருதய ஆண்டவா் பசிலிக்கா ஆலய அருட்தந்தைகள் குழந்தைசாமி, டெலமோா், புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலய பங்குத்தந்தை அருள்புஷ்பம், பள்ளி நிறுவனா் லூா்துசாமி ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

நிகழ்ச்சியை பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவிகள் ஐஸ்வா்யா, பௌசியா பேகம் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT