அன்னை தெரசா பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலைக்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை அரசு சார்பில் அன்னை தெரசாவின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் வே.நாராயணசாமி கலந்து கொண்டு, சட்டப்பேரவை எதிரே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்டப்பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், மு.கந்தசாமி, ஷாஜகான், ஆர்.கமலக்கண்ணன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், தனவேலு, எம்.என்.ஆர். பாலன், விஜயவேணி, திமுக எம்.எல்.ஏ.க்கள் இரா.சிவா, கீதான ஆனந்தன், க.வெங்கடேசன், புதுவை கத்தோலிக்க திருச்சபை போதகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.