புதுச்சேரி

மூதாட்டியிடம் நகை பறித்த கோவை பெண்ணை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

18th Aug 2019 03:21 AM

ADVERTISEMENT


மூதாட்டியிடம் நகை பறித்த கோவை பெண்ணை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் பொன்னி (65).   இவர்,  கடந்த  9-ஆம் தேதி அந்தப் பகுதியில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்றார்.  அப்போது, அவரிடமிருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியை பெண் ஒருவர் பறித்துக் கொண்டு ஓடினார்.
பொன்னியின் அலறல் சப்தத்தைக் கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள் தங்கச் சங்கிலியை பறித்த பெண்ணை பிடித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில், அவர் கோவை மாவட்டம், துடியலூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜாவின் மனைவி மதி (26)  என்பது தெரிய வந்தது.
அவரிடமிருந்து 7 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த போலீஸார்,  நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட 8 பவுன் நகையில் 7 பவுன் மட்டுமே மீட்கப்பட்டது. திருடிய சில நிமிடங்களிலேயே ஒரு பவுன் நகை மாயமாகிவிட்டது.
இதை உடன் வந்தவர்களிடம் கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீஸார், மதியை காவலில் எடுத்து விசாரிக்க கிழக்கு காவல் கண்காணிப்பாளர் மாறன் உத்தரவிட்டார். அதன் பேரில், முத்தியால்பேட்டை போலீஸார், வருகிற 19-ஆம் தேதி, நீதிமன்ற அனுமதியுடன் மதியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT