ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு வங்கிகளில் நிலுவையில் உள்ள கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.
அந்தக் கட்சியின் உருளையன்பேட்டை தொகுதி செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கட்சியின் தொகுதி செயலர் செழியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணவாளன், ஆதிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு கூறு திட்ட நிதியை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களின் மேம்பாட்டுக்குச் செலவு செய்யாமல், பிற துறைக்கு தவறான முறையில் செலவு செய்யக் கூடாது, பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக வடிகால் வாய்க்கால்களைத் துôர்வார வேண்டும், நிலுவையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும், உயர்கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் தொகுதி துணைத் தலைவர் எழில்வளவன் நன்றி கூறினார்.