புதுச்சேரி

அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி மரணம்: உறவினர்கள் மறியல்

11th Aug 2019 03:22 AM

ADVERTISEMENT


புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் - குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலு (28), இவரது மனைவி பாக்கியலட்சுமி (24). 
கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி ராஜீவ் காந்தி அரசு மகளிர் - குழந்தைகள் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, பாக்கியலட்சுமிக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது, பாக்கியலட்சுமிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். குழந்தையும் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை எதிரே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த ரெட்டியார்பாளையம் காவல் உதவி ஆய்வாளர்கள் வீரபத்திரன், ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். 
இதையடுத்து, பிரசவத்தின் போது இறந்த தாய், சேய்  சடலங்களை உடல்கூறி சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில், பிரசவம் பார்த்த மருத்துவர், செவிலியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT