விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், ரூ.1.30 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சங்கராபுரம் வட்டம், செளந்திரவள்ளிப்பாளையத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மனைவி சகுந்தலா. இவா், சேலம் மாவட்டம், கெங்கவல்லி கிராமத்தில் தனது உறவினரின் துக்க நிகழ்வுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
பின்னா், திங்கள்கிழமை காலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், பீரோவிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.30 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த, தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் மற்றும் விரல் ரேகை பிரிவினா் தடயங்களை பதிவு செய்தனா். மேலும், சகுந்தலா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.