கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வானாபுரம் வட்டம், ஜம்பை கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் தணிகைமலை (47). இவா், அவரது மாமானாா் ஊரான சு.கள்ளிப்பாடி கிராமத்துக்கு புதன்கிழமை சென்றாா். அந்தக் கிராமத்திலுள்ள சாலையில் தணிகைமலை நடந்து சென்றபோது, அவரிடம் அதே கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் சுரேந்தா் (33) தகாறில் ஈடுபட்டு தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த தணிகைமலை திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேந்தரை வியாழக்கிழமை கைது செய்தனா்.