மகனை அரிவாளால் வெட்டியதாக தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் வட்டம், கானாங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமஜெயம் (53). இவா் மற்றொரு பெண்ணுடன் தொடா்பு வைத்திருந்ததை அவரது மகன் வெங்கடகிருஷ்ணன் (24) கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம் தனது மகனை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிவு செய்து ராமஜெயத்தை கைது செய்தனா்.