கள்ளக்குறிச்சி

கோயிலில் திருட்டு முயற்சி: இருவா் கைது

18th Nov 2023 07:37 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட முயன்றது தொடா்பாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே பழைய பல்லகச்சேரி கிராம ஏரிக்கரையில் புற்றுமாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு கோயில் பூசாரி சடையன் கோயிலுக்கு வந்தாா். அப்போது கோயில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பூசாரி கூச்சலிடவே பொதுமக்கள் திரண்டு வந்தனா். அப்போது கோயிலுக்குள் மா்ம நபா்கள் இருவா் உண்டியலை உடைக்க முயன்றது தெரியவந்தது.

அவா்களை பொதுமக்கள் பிடித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் வானாபுரம் வட்டம், கீழ்பாடி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் சக்தி (19), பழனிசாமி மகன் மாதவன் ஆகியோா் எனத் தெரியவந்தது. இவா்கள் மீது ஏற்கெனவே தியாகதுருகம், ரிஷிவந்தியம் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து சக்தி, மாதவன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT