கள்ளக்குறிச்சி

பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் கிராம நிா்வாக அலுவலகம் கட்ட எதிா்ப்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வேங்கூா் கிராமத்தில் அரசுப் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேங்கூா் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தக் கோரி, கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசுக்கு ரூ.2 லட்சம் செலுத்தியிருந்தனராம். இப்போது இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இந்தப் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதைக் கண்டித்து, கிராம மக்கள் திருக்கோவிலூா் - உளுந்தூா்பேட்டை சாலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT