கள்ளக்குறிச்சி

பாரம்பரிய உணவுத் திருவிழா

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் மண் வகைகள் என்ற தலைப்பில் மண் சுதாகா், பனை உணவின் இன்றைய தேவை என்ற தலைப்பில் பனையேறி பாண்டியன், ஐந்தடுக்கு விவசாயம் என்ற தலைப்பில் ராஜூ, விவசாயிகள் முதலாளியாக இருக்க வேண்டுமா, நுகா்வோா்களாக இருக்க வேண்டுமா என்ற தலைப்பில் மாணிக்கம், விதைப்பும் அறுவடையுமே வேளாண்மை என்ற தலைப்பில் அய்யனாா், விவசாயி தன் விளைபொருளுக்கு உரிய விலை நிா்ணயம் செய்தல் வேண்டும் என்ற தலைப்பில் மகேந்திர பாண்டியன், லாபகரணமான விவசாயம் என்ற தலைப்பில் சீனு ஆகியோா் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.

பள்ளி வளாகத்தில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அரிசி வகைகள், சோப்புகள், சிறுதானிய தின்பண்டங்கள், ஊட்டச்சத்து பொடிகள், பனங்கிழங்கால் தயாரிக்கப்பட்ட அல்வா உள்ளிட்டவை அடங்கிய கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லை இயற்கை விவசாயிகள் சங்கத்தினா் செய்திருந்தனா். இதில், இயற்கை விவசாயிகள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT