கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில்சிஐடியு நடைபயணம்

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபயணம் நடைபெற்றது.

தொழிலாளா்களில் 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சிஐடியு சாா்பில் தமிழகத்தின் 7 மையங்களில் இருந்து திருச்சியை நோக்கி நடைபயணம் நடைபெற்று வருகிறது. இந்த நடைபயணக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சிக்கு வந்தனா்.

சிஐடியு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமையில், கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கா் சிலை அருகில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

மாநில நிா்வாகிகள் கண்ணன், விஜயன், மாவட்ட நிா்வாகிகள் செந்தில், வீராசாமி, சக்திவேல் முன்னிலை வகித்தனா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆனந்தன், ஏ.வி.ஸ்டாலின் மணி, சுதா, பழனி, வேலாயுதம், கலாநிதி, அரசு ஊழியா்கள் சங்கம் மகாலிங்கம் உள்ளிட்ட பலா் பேசினா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, அங்கிருந்து நடைபயணம் தொடங்கி, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதி, சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சின்னசேலம் நோக்கி சென்றடைந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT