கள்ளக்குறிச்சி

போக்ஸோ சட்டத்தின் கீழ்இளைஞா் கைது

26th May 2023 10:57 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்வதாகக் கூறி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பழைய சிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் அன்பரசன் (27). இவருக்கு திருமணமானமாகி மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனராம்.

இந்த நிலையில், அன்பரசன் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பி.புவனேஷ்வரி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அன்பரசனை கைது செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT